Sunday 20 December 2015

நின் மடி சாய்ந்தே மடிவேன்.....
















இள மயில் இவளை இரு விழி வழியே
இளமையில் அவளது இரு விழி கண்டேன்
இலக்கிய இலக்கணம் இரண்டும் அறியேன்
இருப்பினும் இவள் விழி இயற்றிட வைத்தது
இருநூறு கவியையும் இதயத்தின் மையை கொண்டு…

இருபது வருடம் கடந்தே சென்றினும்
இருவரின் காதல் கசந்திடாதடி கண்மணி
ஈருடல் தீண்டும் காமம்
இருவிழியினுள் நடந்தேரும்
மூன்று வரி காதல் மொழியும்
முத்தங்கள் இன்றி இவளை சேர்ந்திடும்
சத்தமில்லா சிறு புன்னகை வழி…

நாற்பது வருடம் நகர்ந்த பின்னும்
உன் விழி பார்த்தால்
நானம் கலையாது தலை குனிவாய்
நயமாய் நானும் அந் நானம் இரசிக்க
நகங்கள் கடிக்க என் நெஞ்சில் சாய்வாய்
நன் வாழ்க்கை வாழ்ந்த நிம்மதியோடு
நின் மடி சாய்ந்தே மடிவேன்….







Sunday 13 December 2015

கன்னத்தில் முத்தமிட்டாய்....


















சிசுவாய் ஒளிந்துக்கொண்டு
உன் உணவினை திருடி உண்பேன்
தூக்கத்தை திருடிச்செல்வேன்

உனக்கு பிடித்த எதையும்
செய்ய விடமாட்டேன்
மீறி செய்தால் தண்டனை தருவேன்

உன்னுள் இருக்கையில் என்னவொரு
உணர்வாய் இருப்பினும்
உன் வயிர் உதைத்தே உரைப்பேன்

உலகை கானும் ஆசை வந்ததும்
உன் எலும்பை முறித்து
உடலில் உள்ள அனைத்தையும் துன்புறுத்தி
குருதி தெறிக்க வன்முறை செய்தே
உன் உடல் கிழித்து வெளிவந்தேன்

இதன் பிறகும்,
ஏனடி என்னை
உன் கையில் தந்தவுடன்
கண்ணீர் மல்க
கன்னத்தில் முத்தமிட்டாய்…….



Saturday 7 November 2015

அவளும்... மழையும்...

மேகங்கள் கண் மையிட்டு
மண் வாசம் நாசி தொட்டு
மனதோடு மேளமிட்டு
எனை வந்து நனைக்கிறது
யான் காண ஏங்கும்
என்னவள் போல் மாமழையும்

என் இதயத்தின் காதல் நீரோடை
உட்கொண்ட-உன் இதயமுகில்கள்
பாரம் தாங்க இயலாமல்-என் மீதே
காதல் மழையாய்  பெய்ததடி காதலியே

மனிதனை மந்தமாக்கி
உலகை இரசிக்கச் செய்வதில்
மனதை மயக்கச் செய்வதில்
காதலும் மழையும் ஒன்றே

அன்பும் இறையும்
அவளும் மழையும்
இவையே போதும்

இவண் வாழ்ந்திடவே!!






Monday 27 July 2015

என் கடவுள் கலாமே!!













நன் தமிழன் மாண்டு போனான்
நமை இருளில் சாய்த்து போனான்
படைத்தவனை மாய்த்திடவே
மதி பைத்தியம் பிடிக்கச்செய்தான்

எனை ஈர்த்த நாயகனே
மாசில்லா மாணிக்கமே
மறை சோதி மணிவிளக்கே
மறைந்து நீ போனாயே

விண்ணுக்கு கோள் அனுப்பி
எம் மண்ணை நீ பெருமை செய்தாய்
மண்ணிலிருந்து உடல் நீர்த்து
விண்மீன்களுக்கு உணவானாய்

கண்கள் வியர்க்க தேம்பி அழுகும்,
தகப்பன் இழந்த பிள்ளையை போல்
தவிக்கவிட்டாய் நாட்டின் இளைஞரை
எழுந்து வந்திடு உன்னால் முடியும்

நீர் கண்ட கனவெல்லாம்
நிசமாக்க உழைத்திடுவோம்
எம் மனத்தில் என்றும் நீ இறையாய்
திகழ்ந்திடுவாய் என் கடவுள் கலாமே!!


Thursday 28 May 2015

மனிதம் எங்கே ??






பௌத்த மதத்தின் நெறிமுறைகள் என்னவென்று எவரேனும் அறிவீரா ?
இவை எட்டு தான் பிரதான நெறிமுறைகள்.

நற்காட்சி - Right View
நல்லெண்ணம் - Right Thought
நன்மொழி - Right Speech
நற்செய்கை - Right Conduct
நல்வாழ்க்கை - Right Livelihood
நன்முயற்சி - Right Effort
நற்கடைப்பிடி - Right Mindfulness
நற்தியானம் - Right Meditation

உலக மதங்களிலேயே மனிதத்திற்கான அன்பையும் அமைதியையும் போதிக்கும் ஒரு உன்னதமான மதம் பௌத்தம். 
ஆனால் இம்மதத்தைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நமக்கு சகோதர நாடுகளாக திகழும் சிலோன் மற்றும் மியான்மரில் நடந்தேறும் படுகொலைகளையும், இன அழிப்பையும் பற்றி தான் பேசுகிறேன்.
ஆண்டாண்டு காலமாக இந்த இன அழிவு இரண்டு நாடுகளிலுமே
நிகழ்கிறது,

ஒரு நாட்டிற்கு தோள் கொடுத்து உதவினோம்,
பல இலட்சம் தமிழர்கள் மாண்டனர்…


மியான்மருக்கோ
செவி சாய்க்காமல்,
கண் திறக்காமல் இருக்கின்றோம்.

இரு நாடுகள் மீதும் இந்தியாவின் பார்வை என்ன ?
ஒருவன் தமிழன் தானே?
மற்றொருவன் இஸ்லாமியன் தானே?

அனைவரும் மனிதர்கள் தான் என்பதை மறந்துவிடுகிறோம்.
மனித இனத்தின் அமைதிக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்த அடிப்படைகளுக்கு கீழ் பயணிக்கும் இம்மதத்தை வளர்க்க ஒரு இனத்தையே அழித்து தான் வளர்க்கவேண்டும் என்றால்,இந்த மதம் உருவாக்கப்பட்ட காரணமே மாறிப் போகிறதே…

புத்தன் வாழ்க்கையின் துக்கங்களைக் கண்டு துறவியாய் மாறி உலக அமைதிக்காக போராட தொடங்கிய ஒரு உன்னதமான போராளி. ஆனால் அவர் தத்துவங்களை ஏற்பவர்கள் ஏன் தீவிரவாதியானார்கள் என்று தான் எனக்கு விளங்கவில்லை..


இந்துவோ
இஸ்லாமியரோ
தமிழரோ
ஆப்பிரக்கரோ
அனைவரும் மனிதர்
அனைவரும் ஒன்றே.

உலகம் ஒன்று கூடி அமைதிக்காக உரக்க குரல் கொடுத்தால்
பணியாதா மியான்மர் ??
பணியும் என்ற ஒரு நம்பிக்கை தான் இந்த பதிவு.


மனிதம் எங்கே ??



Saturday 16 May 2015

உரக்கச்சொல்வோம் உலகுக்கு..!!























உன் உடல் மறித்து
வீரிய உரமாகி
அதில் எங்கள் குருதி தெளித்து
பல மரங்களாய் நீ உயிர் பெறுவாய் எம் ஏந்தலே

மலை,கடல் தாண்டி மாளாமல்
மனிதம் வளர்க்க உழைக்கும்
ஒவ்வொரு தமிழருக்கும்
தலைவன் நீ தான்

பச்சிளம் மழலைகளை மண்ணில் புதைக்க செய்தோன்
வடிவிடை பெண்கள் வடிவை சிதைத்தோன்
உயிர் கொடுத்த தாய் முலை அறுத்தோன்
இதை இழைத்தோன் உடல் உதிரம் பார்க்கா வரை
எம் விழியிரண்டும் உறங்காது தலைவா,

உன் புறமுதுகில் சுட்டு பேடிகள்
உன் உயிர் பறித்தன
நேருக்கு நேராய் நெற்றியில் சுடவே
தைரியமில்லா தேவிடியாள் மகனவன்
கிடைத்தால் போதும் குருதி தெறிக்க கொல்வேன்

அன்பிற்கு இடமில்லை
அமைதிக்கோ அனுமதியில்லை
அன்றோ
உரிமைக்கு குரலுண்டு
வலிமைக்கு உடலுண்டு

களையறுக்க மீண்டும் எழுவோம்
உடன் அணைக்க தலைவன் உயிர்த்தெழுவான்
இரு ’’கருணா’’ துரோகத்தால்
ஈழக்கனவு இருளாது

வீரநடை வீற்றெழுவோம்
விடுதலை அடைந்திடுவோம்
அண்ணல் பிரபாகரன் துணையிருக்கு-இதை,
உரக்கச் சொல்வோம் இவ்வுலகுக்கு!!!









Saturday 9 May 2015

சல்மான்..




தவறுற்று மனம் வருந்தி திருந்தி வாழும் நேரத்தில் தான்
இறைவன் என்பரோ இயற்கை என்பரோ
இதில் ஏதோ ஒன்று
நம் வாழ்க்கையில் ஒரு தேர்வை நடத்திடும் போல
இதில் நாம் எடுக்கும் ஒரு முடிவு தான்,
நம்மை நாம் திருத்திக்கொண்டோமா ? இல்லையா? என்பதற்கான ஒரு விடையும் வாழ்க்கைக்கான நிதர்சனமான உண்மையும் விளங்கும்.

தன் வாழ்க்கையில் இருந்து தானே வாழ்க்கையை கற்றுக்கொள்பவனே
ஞானி என்பர். நம்முள் எத்தனை பேர் ஞானி என்பது தெரியவில்லை.
ஆனால் பிறரின் வாழ்க்கை கண்டு கற்றுக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனாகத்தான் இக்கட்டுரை வரைகிறேன்.

சல்மான் கான்,
இந்திய திரையுலகின் ஒரு முக்கிய நட்சத்திரம்.
தான் செய்த தவறுகளெல்லாம் கழிந்திட பல்வேறு நல காரியங்கள் செய்து திருந்தி வாழும் ஒரு தருவாயில் தான் இயற்கை தன் தேர்வை நிகழ்த்தியது.

தீர்ப்பு வெளிவந்தது.

ஐந்தாண்டுகள் சிறை தண்டனை.

இதை கண்டித்து அவரது ரசிகர்கள்.

உடனடியாக இரண்டு நாட்களுக்கு பெயில்.

இரண்டு நாட்கள் கடந்தன,
தான் சுமந்து கொண்டிருக்கும் செல்வாக்கின் காரணமாக
தீர்ப்பு தள்ளுபடி.

இயற்கை நடத்திய தேர்வில் தோல்வி கண்டார் சல்மான்.
காரணம்,
உண்மையில் மனிதராக (Being human) இருந்திருந்தால்
தனக்களிப்பட்ட தண்டனையை ஏற்றிருப்பார்.
ஆனால்,
அந்த ஒரு நிமிடம் அதை செய்திடாமல் மீண்டும்
தவறான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க உள்ளார்.

மொத்ததில்,
சல்மான்-மதிப்பு கூட்டப்பட்ட ஒருவரின் மதிப்பு கழிக்கப்படும்., இவரது இச்செயலினால்.


இது போல நம் வாழ்விலும்
இயற்கை சில தேர்வுகளை நிகழ்த்தும்,
அதில்,
தர்மத்தையும்,
சத்தியத்தையும்,
அன்பையும் நோக்கிய முடிவுகளே நம்மை மனிதத்தின் அடையாளங்களாக
நம்மை இயற்கை

அங்கீகரிக்கும்.


அன்பே சிவம்!!!




Tuesday 7 April 2015

எனை பெற்றானே...




உன் காதல் சான்றாய் சுரந்த
விந்தில் வென்ற ஒன்றே நான்
உன்னவளின் கறுவரையில்
வீடுற்று வெளிவந்தன்

எனக்கொரு மகன் பிறப்பான்
என்னை போலவெ இருப்பான் என்ற பாடல் போல
உனை போலவே உருவெடுத்து
உலகினை காணக்கண்டேன்.

எதை உனக்கு நான் தருவேன்
அனைத்தையும் எனக்கு நீயே தந்தாய்
அதனால் தானோ தமிழில்
எந்தைக்கு மறுசொல் தந்தை

அகவைகள் பல கடக்க
உடன் நானும் வருகிறேன்
இறைவனும் இயற்கையும் உன்
உடனிருக்க நானும் இருப்பேன்

எனக்கு வாழ்வளித்த என்
முதல் ஆண் காதலே
என் காதலின் சான்றாக உன்
பெயரேந்தி வருவான் உன் பெயரனும்

அவனையும் உன் தோள் சுமக்க நேரும்
வலுவான உடலும் மனதும் வேண்டும்- எனவே
உழைத்தது போதும், உடன் வருவேன்
உன் பாரம் சுமக்க

எனை பெற்றானே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



அன்புடன்,
கார்த்திக் சம்பந்தன் பழனியப்பன்.

Thursday 2 April 2015

கிராமத்தான் கதை...

சிரமங்கள் பல காணும்
சிறு கிராமத்தான் கதை கேட்க
மேலாண்மை பயிலும்
மாணவனாய் சென்றிருந்தேன்

நீரின்றி நிதம் சாகும்
நிலைமை மாறிடவே- தினமும்
குலசாமி கும்பிடும் வெள்ளந்தி மக்கள்
கண்டு மனமும் வருந்தக் கண்டேன்

மண் உழுத மரத்தமிழன்
மழையில்லா வானம் கண்டு
கால் வயிற்று பசியைக் கழுவ
கட்டையடித்து கஞ்சி குடித்தான்

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
சிறந்த பண்பு சிலரிடம் உண்டு
சில்லரைகளையும் சேமிக்கும் சிலரைக்கண்டு
சிறு இதயமும் சிலிர்க்கக் கண்டேன்


மழை, நீயும் பெய்தால் என்ன?
எம் இனம் வாழ பெய்தால் என்ன?
மீண்டும் மண்ணில் குளிக்க-அவன்
மனம் ஏங்கி தவிக்குதம்மா

சிறு மாக்கான் வேண்டுகிறேன்
மேகங்கள் கருக்காதோ?
மனமிறங்கி அழுகாதோ?
அதன் கண்ணீர் மண் தொடாதோ?














அந்தோ இறைவன் உண்டென்றால்
இவன் வினாக்களுக்கு விடை கிட்டும்
விதை விதைக்க வழி பிறக்கும்
களையறுக்க கதவு திறக்கும்………

Saturday 7 March 2015

எனக்கும் ஒரு மகள் பிறப்பாள்…



உலக உயிர்களுக்கெலாம் உயிர் தரும்
உன்னத பெண்மை அனைவரிலும் உண்டு
அப்பெண்மையை அதிகமாய் உண்டு
அதனுடன் அழகுடலும் கொண்டு
அமைதிக்கும் ஆக்கிரோ‌ஷத்திற்கும் இடையில்
அன்போடு பயணிக்கும் உயிர் ஒன்றென்றால்
அன்புறும் பெண்மை தான்…

தொப்புள் கொடி கொண்டு அவளுடன்
தொற்றியிருந்த என் உடலை அறுக்கச்சொல்லி
அவள் மார்போடு அணைத்து கொண்டவள் என் அன்னை..

மண்டையில் ஏதும் ஏறாதபோதும்
உன்னால் முடியுமென தட்டி கொடுத்து
தளர விடாமல் தடுத்தவள் என் தோழி….

ஒரு பாதி உடலாக உயிரோடு கலந்தவள்
கனவுகளிலும் காதோரம் கதை சொல்பவள்
யாரும் சீண்டாத எனையும் அழகனென அழைப்பவள்
உடனிருந்து உயிருக்கே உயிர் சேர்ப்பவள்
எனை ஆள்பவள் அவள் தான் என்னவள்…

எனை ஆள்பவள் உடல் வழி
என் காதலால்
எனில் வாழ்பவள் வருவாள்- அடடா
எனக்கும் ஒரு மகள் பிறப்பாள்…

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...