Tuesday 30 December 2014

பரத்தை..



காமத்தின் கழிவாய் கலந்துருவாகி
கருவறை விடுத்து காட்டில் பிறந்து
குப்பைத்தொட்டியில் வீசப்பட்டது
குறுதியும் கூடுமாய் ஓர் பெண்குழந்தை

இருள் சூழ்ந்த இவ்வுலகில்
இரவு குளிர் காய 
சுடுகாட்டின் அருகே குப்பைத்தொட்டியில்
அன்னை வேசியவள் வீசிவிட்டாள்
இவள் போல உடலால் இறந்தும்
உயிர் வாழவேண்டாமென்று …

கார்ப்பரேஷன் குப்பையள்ளும்
கலைச்செல்வன் கண்டெடுத்தான்
கைக்குழந்தையின் குரல் கேட்டு..
கேவலம் பெண் குழந்தையை
ஐயாயிரம் ரொக்கத்திற்கு விலை விற்றான்
ஐயாயிரம் கொடுத்த கண்ணாயிரம்
குழந்தையை வளர்த்து அவள் தாயிடமே
விற்றான் ஐம்பதாயிரத்திற்காக
இவையனைத்தும் குழந்தையின்
ஐந்து வயதில்…

உடலுணர்வை இழந்திட
உயிரின்றி நிதம் நிதம் வாழ்ந்திட
பயிற்சி பெற்றாள் பதுமை அவள்

பதினைந்து வயதிற்குள்
பல மிருகம் கண்ட பிள்ளையிவளிற்கு
ஓர் மிருகம் வழி வந்தது
எய்ட்ஸ் வைரசின் வினை

இரவினில் சென்ற
அவளை அடித்து உடல் கிழித்து
உடல் உண்ண வந்த
ஐவருக்கும் பகிர்ந்தளித்து
உடல் குறுகி
அழகழிந்து அம்மணமாய் இறந்தாள்
அவள் வீசப்பட்ட குப்பைத்தொட்டியின்
அருகில் குழந்தையை போலவே…

ஒவ்வொரு இரவும் மிருகங்களுக்கு
காதல் விற்ற இந்த தெய்வத்திற்கு
நாம் அளித்த பெயரோ
’’பரத்தை’’





Saturday 13 December 2014

ஊடலும் கூடலும்..



முத்தத்தோடு அருகில் வந்தால்
சத்தமின்றி உதடுகள் தருவாய்
மொத்தமாக சரணடைந்தாயே
செத்து போன ஹார்மோண்களையும்
சத்து ஊட்டி சிலிர்க்க செய்தாயே.......

மூடிய கண்களில்
கூடவே ஆசைகள்
ஊடலை மீறியும்
உடலில் கீறல்கள்
சாடலாய் கண் சிமிட்டி
பாடலாய் பார்வையிலே
என் தேடலை விதைத்தாயே.......

முத்த விதை உன் கண்ணத்தில் விதைத்தால்
ஏனோ புரியவில்லை
என் கண்ணத்தில் முத்தமரம் வளர்கின்றது உன்
உதட்டின் முத்தத்துளிகள் வழி......


Friday 5 December 2014

அன்புடைமை...


 
எழுத்தறியாதவனிடம் வள்ளுவனின் எழுத்தானி கிடைத்தார்போல் அன்பிலாதவனிடம் அறிவு








Monday 1 December 2014

அன்பே சிவம்!!





தை என்றால் அரோகரா என்றும்
கார்த்திகை என்றால் ஐயப்பா என்றும்
டிசம்பரில் ஆ லே லூயா என்றும்
ஜுன் ஜூலையில் அல்லாஹு அக்பர் என்பதற்கு பதில்
தினம் தினம் அன்பே சிவம் என்போமென்றால்
அழகுலகம் அமைதியாய் சுழலும்….


ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...