Tuesday 30 December 2014

பரத்தை..



காமத்தின் கழிவாய் கலந்துருவாகி
கருவறை விடுத்து காட்டில் பிறந்து
குப்பைத்தொட்டியில் வீசப்பட்டது
குறுதியும் கூடுமாய் ஓர் பெண்குழந்தை

இருள் சூழ்ந்த இவ்வுலகில்
இரவு குளிர் காய 
சுடுகாட்டின் அருகே குப்பைத்தொட்டியில்
அன்னை வேசியவள் வீசிவிட்டாள்
இவள் போல உடலால் இறந்தும்
உயிர் வாழவேண்டாமென்று …

கார்ப்பரேஷன் குப்பையள்ளும்
கலைச்செல்வன் கண்டெடுத்தான்
கைக்குழந்தையின் குரல் கேட்டு..
கேவலம் பெண் குழந்தையை
ஐயாயிரம் ரொக்கத்திற்கு விலை விற்றான்
ஐயாயிரம் கொடுத்த கண்ணாயிரம்
குழந்தையை வளர்த்து அவள் தாயிடமே
விற்றான் ஐம்பதாயிரத்திற்காக
இவையனைத்தும் குழந்தையின்
ஐந்து வயதில்…

உடலுணர்வை இழந்திட
உயிரின்றி நிதம் நிதம் வாழ்ந்திட
பயிற்சி பெற்றாள் பதுமை அவள்

பதினைந்து வயதிற்குள்
பல மிருகம் கண்ட பிள்ளையிவளிற்கு
ஓர் மிருகம் வழி வந்தது
எய்ட்ஸ் வைரசின் வினை

இரவினில் சென்ற
அவளை அடித்து உடல் கிழித்து
உடல் உண்ண வந்த
ஐவருக்கும் பகிர்ந்தளித்து
உடல் குறுகி
அழகழிந்து அம்மணமாய் இறந்தாள்
அவள் வீசப்பட்ட குப்பைத்தொட்டியின்
அருகில் குழந்தையை போலவே…

ஒவ்வொரு இரவும் மிருகங்களுக்கு
காதல் விற்ற இந்த தெய்வத்திற்கு
நாம் அளித்த பெயரோ
’’பரத்தை’’





Saturday 13 December 2014

ஊடலும் கூடலும்..



முத்தத்தோடு அருகில் வந்தால்
சத்தமின்றி உதடுகள் தருவாய்
மொத்தமாக சரணடைந்தாயே
செத்து போன ஹார்மோண்களையும்
சத்து ஊட்டி சிலிர்க்க செய்தாயே.......

மூடிய கண்களில்
கூடவே ஆசைகள்
ஊடலை மீறியும்
உடலில் கீறல்கள்
சாடலாய் கண் சிமிட்டி
பாடலாய் பார்வையிலே
என் தேடலை விதைத்தாயே.......

முத்த விதை உன் கண்ணத்தில் விதைத்தால்
ஏனோ புரியவில்லை
என் கண்ணத்தில் முத்தமரம் வளர்கின்றது உன்
உதட்டின் முத்தத்துளிகள் வழி......


Friday 5 December 2014

அன்புடைமை...


 
எழுத்தறியாதவனிடம் வள்ளுவனின் எழுத்தானி கிடைத்தார்போல் அன்பிலாதவனிடம் அறிவு








Monday 1 December 2014

அன்பே சிவம்!!





தை என்றால் அரோகரா என்றும்
கார்த்திகை என்றால் ஐயப்பா என்றும்
டிசம்பரில் ஆ லே லூயா என்றும்
ஜுன் ஜூலையில் அல்லாஹு அக்பர் என்பதற்கு பதில்
தினம் தினம் அன்பே சிவம் என்போமென்றால்
அழகுலகம் அமைதியாய் சுழலும்….


Thursday 20 November 2014

மா...



S. இளையராஜா’வின் ஓவியம்


கடைக்குழந்தை தாய் மடியில்
பசி தீர பால் குடிக்க
முகம் புதைக்க மார் தேடி
முதல் குழந்தை அழுகையிலே
இரு குழந்தை பெற்றவள் தான்
இவ்வுலகில் போராளி.....



Monday 17 November 2014

வைரத்தை நோக்கி....




காதல், இந்த மூன்றெழுத்து கிறுமி ஆக்கிரமித்துள்ள இதயங்கள் ஏராளம்.
பேக்டீரியா போன்றது காதல், இக்கிறுமியை பற்றி பேசியவர்கள் பலர்,
நானும் பேச விரும்புகிறேன், காரணம் நானும் ஜனநாயகத்தின் குழந்தை தான்....

காதல் என்றால் என்ன?
காதலின் அர்த்தம் தான் என்ன என்று முட்டிக்கொள்ளும் பல பேரில் நானும் ஒருவன். ஒரு முடிவு செய்தேன் , பல்வேறு மனிதர்களை சந்தித்து அவர்களிடம் கேள்வி கேட்கலாம் என்று..

ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஆணை கேட்டேன் ”காதல் என்றால் என்ன” என்று?
”லவ்வு”  என்று பதிலளித்தார்... அதான் அண்ணேண் அப்படீன்னா என்ன??
”லவ்வு நா ரொம்ப புனிதமானது” ...
ஓ! அப்பிடியா? எப்படி புனிதமானது என்று உணர்ந்தீர்கள்??
“அட போப்பா” என்று சென்று விட்டார்...

ஏதோ என் மனதில் இது சரி வராது என்று நன்றாக புரிந்தது...
என் அறைக்கு சென்றேன்...
என் அறையின் வலது புற ஓரத்தில் சம்மணம் கொட்டி அமர்ந்த்தேன்..
கண்களை மூடினேன்.. எனக்கே நான் சொல்லிக்கொண்டேன்,
கேள்வி ஒன்று உதயமாகிறதென்றால் அதற்கு பதில் இன்றியா உருவாகிறது ? பதில் இன்றி எந்த ஒரு கேள்வியும் உதயமாகாது...
உனது பதில் வைரம் போல..
தோண்டு... களிமண்களாய் இருக்கும் உன் குழப்பங்கள் களையட்டும்..
ஓரிடத்தில் வைரம் தென்படும்....

கண்களினுள் இருள் ...
மனதும் மெளனம் கொண்டது ...
நிசப்த்தத்தின் சப்தத்தை உணர முடிந்தது...
இருளின் அழகை உணர முடிந்தது...

திடீரென ஒரு ஒளி ...
சிம்லா சென்றபோது ரசித்த ஒரு மலர் கண்முன் நின்றது...
அங்கு நான் ரசித்த பனி மலைகள் ஒடியது..
கன்னியாகுமரியில் கண்ட சூரிய உதயம் கண்முன் வந்தது...
கிருஷ்ணனின் புல்லாங்குழலிசை காதோரம் நதிவெள்ளம் போலே பாய்ந்தது..

உடல் சிலிர்த்தது....மயிர் எழுந்தது......
கண்களில் நீர் மழைக் காலத்தின் நீர் தேக்கம் போல தேங்கி நின்றது...

மீண்டும் இருள்... இது தான் காதலா? என்று எனக்குள் மீண்டும் ஒரு கேள்வி... இன்னும் பதிலை நோக்கிய பயணத்தில் உள்ளேன் என்று உணர்ந்தேன்...

இருக மூடிக்கொண்ட கண்களினுள் மீண்டும் சில நினைவுகள்..
அம்மா வந்தாள்,
அப்பா வந்தார்,
என்னவள் வந்தாள்,
தாத்தா, பாட்டி , நண்பர்கள் , தலைவர்கள் என பலர் ஒடினர் கண்முன்னே..
கண்களின் வழி நீர் வழிவதை உணர்ந்தேன்...
ஆயினும் என் கண்களை யாரோ ஃபெவி-க்விக் கொண்டு ஒட்டியது போல ஒரு உணர்வு... இம்முறை கண்களை திறக்க இயலவில்லை..
இன்னும் நான் பதில் அறியும் பயணத்தில் தான் உள்ளேன் என்று விளங்கியது..

மீண்டும் இருள்,
SLIDE-SHOW போல எண்ண ஓட்டங்கள்...
என் முதல் பிறந்தநாள்,
என் முதல் முத்தம்,
என் முதல் வெற்றி,
என் முதல் பரிசு,
ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கார்,
இந்தியா உலககோப்பை வெற்றி என பல்வேறு நிகழ்வுகள் கண்முன் நகர்ந்தது...

சட்டென காட்டாற்று வெள்ளம் அணையை உடைத்துகொண்டு பாய்வது போல என் கண்களை உடைத்து கொண்டு கண்ணீர் பாய்ந்தது.... நிற்காமல் வழிந்தது..சட்டையும் நனைந்த்தது...
கண்கள் திறந்ததன... இருள் அடங்கவில்லை...
கண்ணீர் நின்றது.....இருளும் தெளிய தொடங்கின மெல்ல மெல்ல....
முழுதும் தெளிந்தவுடன் ஆச்சரியம் ...

அனைத்தும் நானாக உணர்ந்தேன்...
சுற்றியுள்ள அனைத்தும் நான் தான் என ஒரு உணர்வு....
என்ன இது என்று விளங்காமல் அறையின் வெளியே சென்றேன்..
அங்கே அம்மாவின் உடல் வழி என்னை கண்டேன்...
உலகமே நானாக உணர்ந்தேன்...

நீ, நான் என்ற வித்தியாசம் மறைந்தது...

காதல் என்பது எனக்கு பிடித்ததோ அல்லது ஆத்மார்த்தமாய் உணர்வதோ என்று காதலை குழப்பங்களோடு புரிந்து கொண்டேன்...அதுவும் காதல் தான்... ஆனால் காதல் என்பது யுனிவர்சல் செட்... நான் கண்களினுள் கண்டது அனைத்தும் காதலின் சப் செட்....

காதல் என்பது அனைத்தும் நான் தான் என்று உணர்வது..
காதல் என்பது நான்
நான் என்பது எல்லாம்
இதுதான் இயற்கையின் நியதி
இதுதான் இறைவனின் நியதியும் கூட..

                                           வைரம் வசப்பட்டது........

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...