சிரமங்கள் பல காணும்
சிறு கிராமத்தான்
கதை கேட்க
மேலாண்மை பயிலும்
மாணவனாய் சென்றிருந்தேன்
நீரின்றி நிதம்
சாகும்
நிலைமை மாறிடவே-
தினமும்
குலசாமி கும்பிடும்
வெள்ளந்தி மக்கள்
கண்டு மனமும் வருந்தக்
கண்டேன்
மண் உழுத மரத்தமிழன்
மழையில்லா வானம்
கண்டு
கால் வயிற்று பசியைக்
கழுவ
கட்டையடித்து கஞ்சி
குடித்தான்
இருப்பதை கொண்டு
சிறப்புடன் வாழும்
சிறந்த பண்பு சிலரிடம்
உண்டு
சில்லரைகளையும்
சேமிக்கும் சிலரைக்கண்டு
சிறு இதயமும் சிலிர்க்கக்
கண்டேன்
மழை, நீயும் பெய்தால்
என்ன?
எம் இனம் வாழ பெய்தால்
என்ன?
மீண்டும் மண்ணில்
குளிக்க-அவன்
மனம் ஏங்கி தவிக்குதம்மா
சிறு மாக்கான் வேண்டுகிறேன்
மேகங்கள் கருக்காதோ?
மனமிறங்கி அழுகாதோ?
அதன் கண்ணீர் மண் தொடாதோ?
அந்தோ இறைவன் உண்டென்றால்
இவன் வினாக்களுக்கு
விடை கிட்டும்
விதை விதைக்க வழி
பிறக்கும்
களையறுக்க கதவு
திறக்கும்………
No comments:
Post a Comment