நன் தமிழன் மாண்டு
போனான்
நமை இருளில் சாய்த்து
போனான்
படைத்தவனை மாய்த்திடவே
மதி பைத்தியம்
பிடிக்கச்செய்தான்
எனை ஈர்த்த நாயகனே
மாசில்லா மாணிக்கமே
மறை சோதி மணிவிளக்கே
மறைந்து நீ போனாயே
விண்ணுக்கு கோள்
அனுப்பி
எம் மண்ணை நீ பெருமை
செய்தாய்
மண்ணிலிருந்து
உடல் நீர்த்து
விண்மீன்களுக்கு
உணவானாய்
கண்கள் வியர்க்க
தேம்பி அழுகும்,
தகப்பன் இழந்த
பிள்ளையை போல்
தவிக்கவிட்டாய்
நாட்டின் இளைஞரை
எழுந்து வந்திடு
உன்னால் முடியும்
நீர் கண்ட கனவெல்லாம்
நிசமாக்க உழைத்திடுவோம்
எம் மனத்தில் என்றும்
நீ இறையாய்
திகழ்ந்திடுவாய்
என் கடவுள் கலாமே!!
No comments:
Post a Comment