இள மயில் இவளை
இரு விழி வழியே
இளமையில்
அவளது இரு விழி கண்டேன்
இலக்கிய இலக்கணம்
இரண்டும் அறியேன்
இருப்பினும்
இவள் விழி இயற்றிட வைத்தது
இருநூறு கவியையும்
இதயத்தின் மையை கொண்டு…
இருபது வருடம்
கடந்தே சென்றினும்
இருவரின்
காதல் கசந்திடாதடி கண்மணி
ஈருடல் தீண்டும்
காமம்
இருவிழியினுள்
நடந்தேரும்
மூன்று வரி
காதல் மொழியும்
முத்தங்கள்
இன்றி இவளை சேர்ந்திடும்
சத்தமில்லா
சிறு புன்னகை வழி…
நாற்பது வருடம்
நகர்ந்த பின்னும்
உன் விழி
பார்த்தால்
நானம் கலையாது
தலை குனிவாய்
நயமாய் நானும்
அந் நானம் இரசிக்க
நகங்கள் கடிக்க
என் நெஞ்சில் சாய்வாய்
நன் வாழ்க்கை
வாழ்ந்த நிம்மதியோடு
நின் மடி
சாய்ந்தே மடிவேன்….
No comments:
Post a Comment