Tuesday 7 April 2015

எனை பெற்றானே...




உன் காதல் சான்றாய் சுரந்த
விந்தில் வென்ற ஒன்றே நான்
உன்னவளின் கறுவரையில்
வீடுற்று வெளிவந்தன்

எனக்கொரு மகன் பிறப்பான்
என்னை போலவெ இருப்பான் என்ற பாடல் போல
உனை போலவே உருவெடுத்து
உலகினை காணக்கண்டேன்.

எதை உனக்கு நான் தருவேன்
அனைத்தையும் எனக்கு நீயே தந்தாய்
அதனால் தானோ தமிழில்
எந்தைக்கு மறுசொல் தந்தை

அகவைகள் பல கடக்க
உடன் நானும் வருகிறேன்
இறைவனும் இயற்கையும் உன்
உடனிருக்க நானும் இருப்பேன்

எனக்கு வாழ்வளித்த என்
முதல் ஆண் காதலே
என் காதலின் சான்றாக உன்
பெயரேந்தி வருவான் உன் பெயரனும்

அவனையும் உன் தோள் சுமக்க நேரும்
வலுவான உடலும் மனதும் வேண்டும்- எனவே
உழைத்தது போதும், உடன் வருவேன்
உன் பாரம் சுமக்க

எனை பெற்றானே
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



அன்புடன்,
கார்த்திக் சம்பந்தன் பழனியப்பன்.

Thursday 2 April 2015

கிராமத்தான் கதை...

சிரமங்கள் பல காணும்
சிறு கிராமத்தான் கதை கேட்க
மேலாண்மை பயிலும்
மாணவனாய் சென்றிருந்தேன்

நீரின்றி நிதம் சாகும்
நிலைமை மாறிடவே- தினமும்
குலசாமி கும்பிடும் வெள்ளந்தி மக்கள்
கண்டு மனமும் வருந்தக் கண்டேன்

மண் உழுத மரத்தமிழன்
மழையில்லா வானம் கண்டு
கால் வயிற்று பசியைக் கழுவ
கட்டையடித்து கஞ்சி குடித்தான்

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
சிறந்த பண்பு சிலரிடம் உண்டு
சில்லரைகளையும் சேமிக்கும் சிலரைக்கண்டு
சிறு இதயமும் சிலிர்க்கக் கண்டேன்


மழை, நீயும் பெய்தால் என்ன?
எம் இனம் வாழ பெய்தால் என்ன?
மீண்டும் மண்ணில் குளிக்க-அவன்
மனம் ஏங்கி தவிக்குதம்மா

சிறு மாக்கான் வேண்டுகிறேன்
மேகங்கள் கருக்காதோ?
மனமிறங்கி அழுகாதோ?
அதன் கண்ணீர் மண் தொடாதோ?














அந்தோ இறைவன் உண்டென்றால்
இவன் வினாக்களுக்கு விடை கிட்டும்
விதை விதைக்க வழி பிறக்கும்
களையறுக்க கதவு திறக்கும்………

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...