காமத்தின் கழிவாய்
கலந்துருவாகி
கருவறை விடுத்து
காட்டில் பிறந்து
குப்பைத்தொட்டியில்
வீசப்பட்டது
குறுதியும் கூடுமாய்
ஓர் பெண்குழந்தை
இருள் சூழ்ந்த
இவ்வுலகில்
இரவு குளிர் காய
சுடுகாட்டின் அருகே
குப்பைத்தொட்டியில்
அன்னை வேசியவள் வீசிவிட்டாள்
இவள் போல உடலால்
இறந்தும்
உயிர் வாழவேண்டாமென்று
…
கார்ப்பரேஷன் குப்பையள்ளும்
கலைச்செல்வன் கண்டெடுத்தான்
கைக்குழந்தையின்
குரல் கேட்டு..
கேவலம் பெண் குழந்தையை
ஐயாயிரம் ரொக்கத்திற்கு
விலை விற்றான்
ஐயாயிரம் கொடுத்த
கண்ணாயிரம்
குழந்தையை வளர்த்து
அவள் தாயிடமே
விற்றான் ஐம்பதாயிரத்திற்காக
இவையனைத்தும் குழந்தையின்
ஐந்து வயதில்…
உடலுணர்வை இழந்திட
உயிரின்றி நிதம்
நிதம் வாழ்ந்திட
பயிற்சி பெற்றாள்
பதுமை அவள்
பதினைந்து வயதிற்குள்
பல மிருகம் கண்ட
பிள்ளையிவளிற்கு
ஓர் மிருகம் வழி
வந்தது
எய்ட்ஸ் வைரசின்
வினை
இரவினில் சென்ற
அவளை அடித்து உடல்
கிழித்து
உடல் உண்ண வந்த
ஐவருக்கும் பகிர்ந்தளித்து
உடல் குறுகி
அழகழிந்து அம்மணமாய்
இறந்தாள்
அவள் வீசப்பட்ட
குப்பைத்தொட்டியின்
அருகில் குழந்தையை
போலவே…
ஒவ்வொரு இரவும்
மிருகங்களுக்கு
காதல் விற்ற இந்த
தெய்வத்திற்கு
நாம் அளித்த பெயரோ
’’பரத்தை’’
வருக! வாழ்க! வளர்க!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
DeleteKevalam nammelaam manushanga dhaaney :(
ReplyDelete