தவறுற்று மனம்
வருந்தி திருந்தி வாழும் நேரத்தில் தான்
இறைவன் என்பரோ
இயற்கை என்பரோ
இதில் ஏதோ ஒன்று
நம் வாழ்க்கையில்
ஒரு தேர்வை நடத்திடும் போல
இதில் நாம் எடுக்கும்
ஒரு முடிவு தான்,
நம்மை நாம் திருத்திக்கொண்டோமா
? இல்லையா? என்பதற்கான ஒரு விடையும் வாழ்க்கைக்கான நிதர்சனமான உண்மையும் விளங்கும்.
தன் வாழ்க்கையில்
இருந்து தானே வாழ்க்கையை கற்றுக்கொள்பவனே
ஞானி என்பர். நம்முள்
எத்தனை பேர் ஞானி என்பது தெரியவில்லை.
ஆனால் பிறரின்
வாழ்க்கை கண்டு கற்றுக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனாகத்தான் இக்கட்டுரை வரைகிறேன்.
சல்மான் கான்,
இந்திய திரையுலகின்
ஒரு முக்கிய நட்சத்திரம்.
தான் செய்த தவறுகளெல்லாம்
கழிந்திட பல்வேறு நல காரியங்கள் செய்து திருந்தி வாழும் ஒரு தருவாயில் தான் இயற்கை
தன் தேர்வை நிகழ்த்தியது.
தீர்ப்பு வெளிவந்தது.
ஐந்தாண்டுகள் சிறை
தண்டனை.
இதை கண்டித்து
அவரது ரசிகர்கள்.
உடனடியாக இரண்டு
நாட்களுக்கு பெயில்.
இரண்டு நாட்கள்
கடந்தன,
தான் சுமந்து கொண்டிருக்கும்
செல்வாக்கின் காரணமாக
தீர்ப்பு தள்ளுபடி.
இயற்கை நடத்திய
தேர்வில் தோல்வி கண்டார் சல்மான்.
காரணம்,
உண்மையில் மனிதராக
(Being human) இருந்திருந்தால்
தனக்களிப்பட்ட
தண்டனையை ஏற்றிருப்பார்.
ஆனால்,
அந்த ஒரு நிமிடம்
அதை செய்திடாமல் மீண்டும்
தவறான பாதையை தேர்ந்தெடுத்து
பயணிக்க உள்ளார்.
மொத்ததில்,
சல்மான்-மதிப்பு கூட்டப்பட்ட ஒருவரின் மதிப்பு கழிக்கப்படும்., இவரது இச்செயலினால்.
இது போல நம் வாழ்விலும்
இயற்கை சில தேர்வுகளை
நிகழ்த்தும்,
அதில்,
தர்மத்தையும்,
சத்தியத்தையும்,
அன்பையும் நோக்கிய
முடிவுகளே நம்மை மனிதத்தின் அடையாளங்களாக
நம்மை இயற்கை
அங்கீகரிக்கும்.
அன்பே சிவம்!!!