கண் அசர்ந்து நான்
உறங்கச் செல்வேன்
கண் வியர்க்க
அருகில் வருவாள்
கதைகள் பல
அவள் சொல்வாள்
கட்டியணைத்து
கண் துடைப்பேன்
குழல் கோதி
உறங்க வைப்பேன்
கண்ணம்மாவை
முத்தமிட
சத்தமின்றி
நான் செல்வேன்
முகம் நடுவே
நுழைத்திடுவாள்
அவளுக்கான
முத்தத்தை
இவள் திருடிச்
சென்றிடுவாள்
கண்ணம்மாவென
நான் அழைக்கும்
இன்னுமொரு
பெண்ணென்றால்
கண்ணம்மா-
என் குழந்தையென்பேன்….
சின்ன கண்ணம்மா முத்தம் பெற்றதுமே,
ReplyDeleteபெற்றவள் முகம் வாடிடுமே
கண்ணன், அவள் கண்ணனென்பாள்
குழந்தையாயினும் அவன் என்னவன் என்பாள்.. :)
The last line can be edited as,
ReplyDeleteகுழந்தையாய் குழந்தையிடம் கோபம் கொள்வாள்
கண்ணன் என்றும் என்னவன் என்பாள்...
நன்றி...தங்களது கருத்துக்கும்..கவிதைக்கும்..
ReplyDelete