நின் விழி
பார்த்த ஞாபகமும்
நின் குரல்
இசைத்த ஒசையும்
நின் நிழல்
தேடும் என் நிழலும்
நிதம் என்
நினைவினில் நிற்குதடி..
இசையாக நம்
நினைவு
திசையெங்கும்
உலவும்பொழுது
கசையடி கூட
தாங்கினும்
எவ்விசைக்கும்
அசையாதடி நம் காதல்..
இரவும் பகலும்
இருவிழியணைத்தே
இருவரும்
வாழ்வோம்
இவர்கட்கு
எதற்கு இதற்கென்று
ஒரு தினம்??
விழியினுள்
தெரியாத காதலையா
எம் மொழி
கூறிவிடும்?
எம் இதழ்
சொல்லா காதலையா
சோக்லேட்
சொல்லிவிடும்?
கட்டியணைத்தல்
சொல்லா காதலையா
கரடி பொம்மை
சொல்லிவிடும்?
வெளிநாட்டு
மோகத்தை காதலிலும் தினித்து
தூய உணர்வுக்கும்
கலப்படம் சேர்க்கும்
விண்ணைத்தாண்டி
வரும்
விற்பன்னர்கள்
வாழும் காலமிது
தினம் தினம்
காதல் பேசி
திரளணைத்து
திரவியம் தேடும்
தினம் அனைத்தும்
காதலர் தினமே
எனவே, எதற்கடா
பிப்ரவரி 14 ??
No comments:
Post a Comment