காதலியின்
விழி பறிக்க
காளையனாய்
மாறி
சீறி வரும்
சின்னமனூர்
காளையின்
திமில் தழுவும்
புணைப்போடு
புழுதி பறக்க
ஏரின் திமில்
மீதேறி அதன் திமிருடைத்து
தீரனாய் வெற்றிக்கண்டான்
வீரத்தமிழன்…
வீரத்தமிழனின்
விண்ணுயர
மேன்மைகளை
வழி வழியே
சேர்த்திடினும்,
சேரா எதிரிகள்
முதலில்
மதம் கொண்டு
கலைத்தனர்,
பிறகு சாதி
கொண்டு கலைத்தனர்,
இப்பொழுது
வியாபாரம் கொண்டு கலைக்கின்றனர்
அன்னைத்தமிழ்
இருக்கையில்
அழகு கொஞ்சும்
பிள்ளைக்கு
அண்டை மொழி
பெயர் எதற்கு?
பாலோடு தமிழூட்டி
தமிழோடு கர்வமூட்டி
ஈராயிரம்
பழமை பண்பாட்டை
இதயத்தில்
விதைப்பது
தமிழனின்
கடமை
அன்பின் உயிர்ப்பாய்
அன்னைத்தமிழ்
இருக்கவேனும்
அறமோடு வாழ
திறனோடு ஓட
இதயத்தில்
தமிழ் இருக்கவேனும்
வீழ்வது எதுவாகினும்
வாழ்வது தமிழாகட்டும்…
No comments:
Post a Comment