சினிமா மொழி இலக்கணம் எல்லாம் நான்
அறியாதவன்..சினிமா கையாள வேண்டிய உக்திகளோ, நம்பகத்தன்மையோ என்று இவைகள் எல்லாம்
பேச ஆயிரம் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் ஆயிரம் என்ன? இலட்சம் குறைகள் கூட
சொல்லலாம்.
ஆனால், அருவி... உன்னை கடந்து செல்ல
விடாமல் மனம் என்னை தடுத்து உன் நினைவுகளில் உழன்று பிரள சொல்கிறது ஏனென்று
அறியாமல் அலைகின்றேன்.
அருவிக்கு ஒரு கடிதம்,
நீ சிரிக்க வைத்தாய், காதலில் விழ
வைத்தாய், ஏங்க வைத்தாய், பைத்தியம் ஆக்கினாய், அழுக வைத்தாய், கடைசியாக
பிரிந்தும் சென்றாய்.
நீ கற்பனை தான் என அறிவேன்..
ஆனால் எங்கேனும் உன்னை பார்க்க
விரும்புகிறேன்..பார்த்தால் இருக அணைத்துக்கொள்வேன்.. தந்தையின் உடல் வாசத்தை
உனக்கு தர முயல்வேன்... கால்களை கண்ணீரால் நனைப்பேன்...
ஏன் உன்னை இத்தனை விரும்புகிறேன்?
*ஒடம்பெல்லாம் வலிக்குது.. தாங்க
முடியாத வலி..ஆனா இந்த ஒலகத்துல வாழனும்னு ஆசையா இருக்கு.. அதனால வலிய தாங்கிக்கிறேன்*
உன்னை நான் தீவிரமாய் காதல் செய்ய,
நீ
சொன்ன இந்த ஒரு வசனம் போதுமானது.
மெல்லிய பூக்களுக்குள்- நீ
ஒளிந்திருந்த பூகம்பம்,
சிகரெட்டு புகையினுள்- நீ
மறைத்து வைத்த மலர் வாசம்,
சின்ன சிரிப்புக்குள்- ஓர்
தத்துவ போதனை
அழகான உன் கண்களுக்குள்
அத்தனையும் வேதனை
உன்னை தேவிடியா என்றவர்களையெல்லாம் நீ
தேவதை என சொல்லவைத்து வெற்றியும் கண்டு விட்டாய்.
உனை விடவும் பேரழகி இங்கு எவளும்
இல்லையடி, அருவி.
ஐ லவ் யு அருவி.
மகளாக பிறப்பாயோ? வேண்டுகிறேன்
இயற்கையை.
4th stanza from the last , just nailed it man
ReplyDeleteThanks :)
Delete