கட்டுமரப்
படகேறி
கடல் தாயின்
துணையுடனே
காலமெல்லாம்
மீன் பிடித்து
கருவாடும்
கஞ்சியுமென
அரை வயிற்றை
நிரப்பி வந்தோம்
நிலவொளியில்
மிதந்து சென்று
மீன் அள்ள
வலை விரித்தோம்
சிக்கியதோ
சிங்கக்கொடிக் காவலரின்
துப்பாக்கிக்
குண்டுகளே
வேற்றவன்
தான் எம்மை
விரட்டினான்
என நினைத்தால்
கூற்றுவனாய்
மாறிப்போன
எம் காவலரும்
அடித்தனரே
கிழவியின்
கால் உடைத்தீர்
குழந்தையின்
கை உடைத்தீர்
பெண்டிரின் சீலை அவிழ்த்தீர்
குடிசையில்
தீ வைத்தீர்
என்ன தவறு
யாம் இழைத்தோம்
இயேசப்பா
எம்மை காத்தருள்
நீ
கடல் தாயின்
பிள்ளை நாங்கள்…
No comments:
Post a Comment