இளையராஜாவின் ஓவியம் |
பின்னமர்ந்து
பயணிக்கும் தாயவளின்
மடியிலமர்ந்து
விரல் சுப்பிக்கொண்டு
பயணிக்கின்றேன்
தந்தையவனின்
ஈருருளியில்
வானத்தில்
பார்த்தேன்
நிலவென்னை
பின் தொடர்கிறது
வீதியைப்
பார்த்தேன்
பதுமை ஒருத்தி
முத்தம் கொஞ்சினாள்
விந்தையாய்
நான் திரும்ப
அண்ணன் ஒருவன்
கண் சிமிட்டினான்
வீட்டிற்கு
வந்தவுடன்,
உப்பை கையில்
அடக்கி
என் முகத்தைச்
சுற்றி
கால் கைகளை
உரசி
தூவென்று
துப்பச்சொல்லி
ஊருக்கண்ணெல்லாம்
உதறித் தள்ளிவிட்டாள்
கண்ணுப்படபோகுதையா என்று…
No comments:
Post a Comment