கயல்விழி
கதைச் சொல்ல
முயல் பற்கள்
மொழி பேச
கனியமுதிதழால்
உன்னை
களவாடிச்
சென்றிடுவேன்
பிறைநிலவு
புன்னகையும்
பின்னிய குழலழகும்
பின் நின்று
நீ அணைக்க
என் காதணியும்
வெட்கமுறும்
கருநிறத்து
முரடன் உந்தன்
நிறம் பூசாது
நான் இருந்தால்
நாணத்தில்
என் கண்கள்
நயமாக தெரியாது
உத்தம பொய்கள்
பல உண்மையறிந்தும்
கேட்டிடுவேன்
உன் விருப்பு
வெறுப்பனைத்தறிந்தும்
சீண்டிடுவேன்
செல்ல ஊடல்களுக்கு
அடிக்கல்
நாட்டிடுவேன்
கண்ணம்மா
என நீ அழைத்தால்
குழந்தையாக
மாறிடுவேன்