மேகங்கள்
கண் மையிட்டு
மண் வாசம்
நாசி தொட்டு
மனதோடு மேளமிட்டு
எனை வந்து
நனைக்கிறது
யான் காண
ஏங்கும்
என்னவள் போல்
மாமழையும்
என் இதயத்தின் காதல் நீரோடை
உட்கொண்ட-உன்
இதயமுகில்கள்
பாரம் தாங்க
இயலாமல்-என் மீதே
காதல் மழையாய்
பெய்ததடி காதலியே
மனிதனை மந்தமாக்கி
உலகை இரசிக்கச்
செய்வதில்
மனதை மயக்கச்
செய்வதில்
காதலும் மழையும்
ஒன்றே
அன்பும் இறையும்
அவளும் மழையும்
இவையே போதும்
இவண் வாழ்ந்திடவே!!