பௌத்த மதத்தின்
நெறிமுறைகள் என்னவென்று எவரேனும் அறிவீரா ?
இவை எட்டு தான் பிரதான
நெறிமுறைகள்.
நற்காட்சி - Right View
நல்லெண்ணம் - Right Thought
நன்மொழி - Right Speech
நற்செய்கை - Right Conduct
நல்வாழ்க்கை - Right Livelihood
நன்முயற்சி - Right Effort
நற்கடைப்பிடி - Right Mindfulness
நற்தியானம் - Right Meditation
உலக
மதங்களிலேயே மனிதத்திற்கான அன்பையும் அமைதியையும் போதிக்கும் ஒரு உன்னதமான மதம் பௌத்தம்.
ஆனால்
இம்மதத்தைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நமக்கு சகோதர நாடுகளாக
திகழும் சிலோன் மற்றும் மியான்மரில் நடந்தேறும் படுகொலைகளையும், இன அழிப்பையும்
பற்றி தான் பேசுகிறேன்.
ஆண்டாண்டு
காலமாக இந்த இன அழிவு இரண்டு நாடுகளிலுமே
நிகழ்கிறது,
ஒரு
நாட்டிற்கு தோள் கொடுத்து உதவினோம்,
பல இலட்சம்
தமிழர்கள் மாண்டனர்…
மியான்மருக்கோ
செவி
சாய்க்காமல்,
கண்
திறக்காமல் இருக்கின்றோம்.
இரு நாடுகள்
மீதும் இந்தியாவின் பார்வை என்ன ?
ஒருவன்
தமிழன் தானே?
மற்றொருவன்
இஸ்லாமியன் தானே?
அனைவரும்
மனிதர்கள் தான் என்பதை மறந்துவிடுகிறோம்.
மனித இனத்தின்
அமைதிக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்த அடிப்படைகளுக்கு கீழ் பயணிக்கும் இம்மதத்தை
வளர்க்க ஒரு இனத்தையே அழித்து தான் வளர்க்கவேண்டும் என்றால்,இந்த மதம்
உருவாக்கப்பட்ட காரணமே மாறிப் போகிறதே…
புத்தன்
வாழ்க்கையின் துக்கங்களைக் கண்டு துறவியாய் மாறி உலக அமைதிக்காக போராட தொடங்கிய
ஒரு உன்னதமான போராளி. ஆனால் அவர் தத்துவங்களை ஏற்பவர்கள் ஏன் தீவிரவாதியானார்கள்
என்று தான் எனக்கு விளங்கவில்லை..
இந்துவோ
இஸ்லாமியரோ
தமிழரோ
ஆப்பிரக்கரோ
அனைவரும்
மனிதர்
அனைவரும்
ஒன்றே.
உலகம் ஒன்று
கூடி அமைதிக்காக உரக்க குரல் கொடுத்தால்
பணியாதா
மியான்மர் ??
பணியும்
என்ற ஒரு நம்பிக்கை தான் இந்த பதிவு.
மனிதம்
எங்கே ??